Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இவர்களுக்கு 4% அகலவிலைப்படி உயர்வு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் இந்த அகல விலைப்படி உயர்வு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஜூலை 1ஆம் தேதி முன் தேதியிட்டு இந்த அகலவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |