Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. உயர்கல்வி நிறுவனங்களில் காலியிடங்கள்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அடுத்த ஒன்றரை வருடங்களில் அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பக்கூடிய நடவடிக்கையில் மத்திய கல்வி அமைச்சகமும் திறன் மேம்பாட்டு துறையும் விரைவில் ஈடுபடும்.

அதன்படி உயர்கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா ஆகிய பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் பிற பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். நாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்குவது என்பதை மக்கள் நலன் சார்ந்த முடிவு. இதன் மூலமாக நாட்டில் வேலைவாய்ப்பு சூழல் வலுப்படுத்த படுவதோடு மட்டுமல்லாமல் இந்திய இளைஞர்களுக்கு அதிக மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அலைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |