ஊழியர்களுக்கு பணி நேரம் உயர்த்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி நேரத்தை உயர்த்துவது போன்ற திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதில் மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில்: “அதுபோன்ற எந்த ஒரு முன் மொழிதலும் அரசிடம் பரிசீலனையில் இல்லை” என கூறியுள்ளார். இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.