நடுத்தர ரேஷன் அட்டைதரர்களுக்கு கூடுதல் அரிசி வழங்கப்படும் என கவர்னர் தாவர்சந்த் கெலாட் அறிவித்துள்ளார்.
கடந்த 2021 வருடம் பெலகாவியில் பத்து நாட்கள் கர்நாடகாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர் சந்த் கெலாட் உரை தொடங்கினார். கர்நாடகத்தில் உரையை தொடங்கி அவர் பிறகு இந்தி மொழியில் பேசினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.
அந்த வகையில் நியாயவிலை கடைகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளில்உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாதம் தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் ,அத்தோடு கூடுதலாக தலா ஒரு கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இது வருகிற ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்.