உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக எந்தவொரு திருவிழாக்களையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து, தமிழகத்தில் சித்திரை திருவிழா, புதுக்கோட்டை தேர் திருவிழா மற்றும் மீனாட்சி திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
ஆகவே தமிழகஅரசு அனைத்து பகுதிகளிளும் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்தும் மற்றும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் நடைபெறும் திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்தும் வருகிறது.
அதன்படி அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி என்ற கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவானது வருகின்ற 18ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு, தமிழ்நாடு அரசு பள்ளி தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு மற்றும் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளி தேர்வுகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.