Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி ….ஐடி ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சூப்பர் சலுகைகள் அறிவிப்பு..!!!

உலக நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இந்நிலையில் ஐடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இன்ஃபோசிஸ், கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் சம்பள உயர்வு மற்றும் போனஸ் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது,

  • இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் முடிவு செய்து உள்ளது. மேலும் ஊழியர்களுக்கு 12% முதல் 13% வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் திறமை வாய்ந்த ஊழியர்களுக்கு 20% முதல் 25% சம்பள உயர்வு, போனஸ் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • ஹெச்.சி.எல் நிறுவனம் தனது ஃப்ரஷர்களுக்கான சம்பள பேக்கேஜே ரூ.4.25 லட்சமாக உயர்த்தியுள்ளது.
  • இந்தியாவில் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நடப்பு நிதி ஆண்டில் தனது ஊழியர்களுக்கு 6% முதல் 8% வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
  • அமேசான் நிறுவனம் தனது அமெரிக்க ஊழியர்களுக்கு சம்பள வரம்பை இரு மடங்காக உயர்த்தி 3,50,000 டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக சம்பளம் வரம்பு1,60,000 டாலராக இருந்தது. கூகுள் நிறுவனம் தனது உயர் அதிகாரிகளுக்கு சம்பளத்தை 6.5 லட்சம் டாலர் இலிருந்து 10 லட்சம் டாலராக உயர்த்தியுள்ளது. மேலும் குறைந்தபட்சம் 4 சீனிர்களுக்கு இந்த சம்பள உயர்வு கிடைத்து உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
  • அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் நிறைய பேர் ராஜினாமா செய்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, போனஸ், விடுமுறை உள்ளிட்ட பல சலுகைகளை அமெரிக்க நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவதற்காக பட்ஜெட்டை இரு மடங்கு உயர்த்தி உள்ளது என்ற தகவலை மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாடெல்லா ஊழியர்களுக்கு அனுப்பிய இமெயிலில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |