தமிழக காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் மாதத்திற்கு ஆறு முதல் பத்து நாட்கள் வரை இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இரவு நேரத்தில் ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக 42 கோடியே 22 ஆயிரத்து 800 ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் காவலர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Categories