கொழும்புவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 11 வெள்ளிக் கிழமை முதல் வாரம் தோறும் கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி ரயில் புறப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்திசையில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கோட்டை இரயில் நிலையம் வந்தடையும். அதேசமயம் இந்த ரயிலில் 530 பயணிகள் பயணிக்க முடியும் என கூறப்படும் நிலையில் மிக விரைவில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Categories