Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி”…. கோவை மக்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் தொடங்கி வைத்தார். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கு மட்டும் 18.45 கோடி ரூபாய் மதிப்பிலான ஒதுக்கீடுகளை முதல்வர் வழங்கியுள்ளார். மீதமுள்ள பயனாளிகளுக்கு அடுத்து வரும் நாட்களில் விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் 45 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன. மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 829பயனாளிகளுக்கு தலா 2.10 லட்சம் ரூபாய் மானியத்துடன் வீடுகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் 11 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி புதிய டாஸ்மாக் கடைகள் இல்லை. இடமாற்றம் மட்டுமே நிகழும். சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் முயற்சியால் கோவை மாவட்ட மக்களின் குறைகளைத் தீர்க்கும் 24×7 சேவை முகாம் கொண்டு வரப்பட்டது.

அதன் மூலமாக வந்த 8,407 அழைப்புகளில் 4,637 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து புகார்களும் விரைவில் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் கோவை மாவட்டத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு கோவை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |