Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி உயர்வு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு வட்டி வீதத்தை நிர்ணயம் செய்கின்றது. அதன்படி தற்போது ஜூலை முதல் செப்டம்பர் காலத்திற்கான வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இந்த நிலையில் வட்டி விகிதம் இம்முறை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அரசின் 10 ஆண்டு பத்திரங்களின் லாபம் 7.46% ஆக உயர்ந்துள்ளது. அதனால் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு இனி வட்டி அதிகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தபால் அலுவலகங்கள் மூலமாக சிறுசேமிப்பு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்து பயன்பெறலாம். இதில் உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

சிறு சேமிப்பு திட்டங்கள்:

  1. தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (SB)
  2. தேசிய சேமிப்பு நிரந்தர வைப்பு நிதி (FD)
  3. தபால் அலுவலக தொடர் வைப்பு நிதி (RD)
  4. மாத வருமானத் திட்டம் (MIS)
  5. சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (SCSS)
  6. பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
  7. செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA)
  8. தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC)
  9. கிசான் விகாஸ் பத்திரம் (KVP)

Categories

Tech |