சீனியர் சிட்டிசன்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில் ஒரு நிலையான வருமானத்தை பெற விரும்புவார்கள். இதனால் சீனியர் சிட்டிசன்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் செய்கின்றனர். வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் மட்டும் தான் தாங்கள் முதலீடு செய்த தொகை பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகத்திலேயே முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்நிலையில் சிறுசேமிப்பு சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி 0.20 சதவீதம் வட்டி விகிதம் அதிகரிக்கவுள்ளது. இந்த அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி இனி 7.6% சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இது ஒரு பாதுகாப்பான முதலீடு என்பதால் பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் இந்த திட்டத்தை விரும்புகின்றனர். மேலும் ரிசர்வ் வங்கி 0.50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் தற்போது 5.90 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் இருக்கிறது. இந்த ரெப்போ வட்டி விகித உயர்வினால் வங்கிகளும், ஃபிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.