Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. சென்னை மக்களுக்கு இனி அனுமதி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அரசு அறிவித்தது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்தது.

அதன் ஒரு பகுதியாக வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், இசிஆர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதேசமயம் கடற்கரைகளில் கூட்டம் கூட கூடாது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி இருப்பதால் இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |