Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்தில் (மார்ச்.7) இன்று விடுமுறை….. அரசு சூப்பர் குட் நியூஸ்……!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் திருவிழா மார்ச் 7 (இன்று) நடைபெற இருக்கிறது. பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் மார்ச் 1 அம்மாவாசை தினத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜையும், இரவு கொடியேற்றமும், சக்திகர ஊர்வலமும் நடைபெற்றது. அதேபோன்று மார்ச் 2 காலை 9 மணியளவில் மயானக்கொள்கை நிகழ்ச்சி ஒன்று விமர்சையாக நடந்தது. அப்போது பிரம்ம காபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

அதன்பின் மார்ச்.3 தங்கநிற மர பல்லாக்கில் அம்மன் ஊர்வலமும், இரவு பெண் பூத வாகனமும் வீதி உலாவும் நடைபெற்றது. மேலும் தினசரி மார்ச் 7 (இன்று) வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கோவில்கள் எதுவுமே திறக்கப்படவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருவதால் கோவில்களுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

அதனை தொடர்ந்து மேல்மலையனுார் அங்காளம்மன் கோயில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு மார்ச் 7 (இன்று) விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எல்லா அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அம்மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் மாணவ, மாணவிகளுக்கு மார்ச் 7 (இன்று) ஏதேனும் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த தேர்வும் வழக்கம் போல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 19 ( சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |