Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழகத்தில் பழங்குடியினருக்கு 1000 புதிய வீடுகள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பழங்குடியினருக்கு ஆயிரம் புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான அறிவிப்பில் விளிம்பு நிலையில் உள்ள இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு வருகின்ற நிதியாண்டில் ஆயிரம் புதிய வீடுகள் 50 கோடியில் கட்டி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை செயல்படுத்தும் வகையில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 726 வீடுகள் கட்ட 31.75 கோடியும், மலைப்பகுதிகளில் 368 வீடுகள் கட்ட 18 புள்ளி 23 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக 1,094வீடுகளை விரைந்து கட்டி முடிக்க தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |