தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவியது. இதனால் ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
எனவே அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கியது. அதோடு மட்டுமில்லாமல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் நீக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அதனைத் தொடர்ந்து வரும் 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஆசிரியர்கள் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். எனவே வருகின்ற 19-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தேர்தல் பணிகள் முடிந்ததும் 23-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.