Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி …. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு முதலான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே அனைத்து மக்களும் சமமாக இந்த பொருட்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினர். அந்த வகையில் கைரேகை செலுத்திவிட்டு ரேஷன் பொருட்களை வாங்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் பல முறை இந்த கைரேகை இயந்திரம் வேலை செய்யாததால் மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதன் காரணமாக மக்களை திருப்பி அனுப்பவேண்டிய சூழல் ஏற்பட்டது. தமிழத்தில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலுமே இத்தகைய பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இது தொடர்பான நிறுவனமான (இந்தியத்‌ தனித்துவ அடையாள ஆணையத்தின்‌)-(Unique Identification Authority of India – UIDAI) உயர்‌ நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறது. இதனிடையில் தற்போது இந்த கைரேகை முறை முழுமையாக வேலை செய்யும் வரையிலும் கைரேகை இல்லாமலேயே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |