Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு….. முதல்வர் சார்பிரைஸ் அறிவிப்பு…..!!!!

ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விரைவில் அகவிலைப்படி உயர்த்தபடும் என்று கூட்டுறவு துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுதும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு அகவிலைப்படியை 14 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மூலம் 19 ஆயிரத்து 658 விற்பனையாளர்கள் மற்றும் 2852 கட்டுநர்கள் பயன்பெறுவர். அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |