தமிழகத்தில் 12ஆம் வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மென்பொருள் வேலைவாய்ப்பு பயிற்சி நடத்த ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2021-2022ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்கள் 2000 பேருக்கு ஆறு முதல் 12 மாதங்கள் வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.இந்தப் பயிற்சியை முடித்தால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடக்கநிலை வேலைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கணிதம் அல்லது பிசினஸ் மேக்ஸ் ஆகிய பாடங்களை பிரதானமாகக் கொண்டு 2021ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது மறு தேர்வு எழுத இருப்பவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ‘டெக்பீ’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் பங்குபெறும் மாணவர்கள், பயிற்சி முடித்த ஹெச்சிஎல் நிறுவன புராஜக்டுகளில் இன்டர்ஷிப் செய்யும்போது மாதந்தோறும் ரூ.10,000 ஸ்டைபண்ட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ள மாணவர்களை தேர்வு செய்து பங்கெடுக்க வைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.