தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகின்ற 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளான 19-ஆம் தேதி வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும்.
எந்த காரணம் கொண்டும் அவர்களுடைய சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது என்று தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஊதியத்துடன் விடுப்பு தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.