Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்.22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மின்னணு இயந்திரங்களில் சின்னம் பொருத்துதல், பூத் சிலிப் வழங்குதல் மற்றும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணைய செயலாளர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊதியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி நாளுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியமாக ரூ.350 வீதம் 3 நாட்கள் வழங்கப்படும். மேலும் உணவுக்காக ரூ.300 என மொத்தம் ரூ.2,050 வழங்கப்படும். அதேபோல் வாக்குப்பதிவு அலுவலர் 1 & 2, அலுவலக உதவியாளர் ஆகியோருக்கும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வாக்குப்பதிவு அலுவலர்-1-க்கு பயிற்சி.நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் 3 நாட்களுக்கு ரூ.750-ம், ரூ.300 உணவுக்கும், ரூ.250 தேர்தலுக்கு வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களுக்கு ரூ.250 மற்றும் தேர்தலுக்கு முந்தைய நாள்ரூ.250 என மொத்தம் ரூ.1,550 அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ( விஏஓ )ரூ.800-ம், வாக்குப்பதிவு அலுவலர் 2, அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு ரூ.600-ம், வாக்குப்பதிவு அலுவலர் 3-க்கு ரூ.1,550-ம், அலுவலக உதவியாளர் ரூ.600, வரவேற்பு அலுவலருக்கு ரூ.800 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளருக்கு ரூ.850, வாக்கு எண்ணிக்கை உதவியாளருக்கு ரூ.650, அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.300 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடும் நுண்பார்வையாளர்களுக்கு ரூ.450-ம், தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கு ரூ.1,000-ம் ஊதியமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |