Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. ஆதார் எண் பெற சிறப்பு ஏற்பாடு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறையில் கல்வி வலைதளத்தில் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதாரங்கள் உள்ளீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கே.எஃப்.சி பள்ளி வளாகத்தில் 1 முதல் 15 வரை வயதுள்ள குழந்தைகளுக்கு மட்டும் உடுமலை, பல்லடம், அவிநாசி, வட்டார வள மையங்கள் என நான்கு இடங்களில் ஆதார் மையங்கள் இயங்கி வருகிறது.

மேலும் 5 முதல் 15 வயதுக்கு கைரேகை பதிவு அப்டேட் செய்யப்படுகிறது. தடுப்பு விதிமுறைகள் அடிப்படையில் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் பெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் முறையாக பதிவு செய்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் மற்றும் குழந்தையுடன் அழைத்துவர வேண்டும். இது முற்றிலும் இலவசம் என கேள்வி பள்ளி வட்டார வள மைய பார்வையாளர் அலீமா  கூறியுள்ளார்.

Categories

Tech |