Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 13 நாட்கள் விடுமுறை…. வந்தது மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.தேர்வுகள் முடிந்த பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வு தொடங்கும். அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதியும், ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பல பண்டிகைகள் மற்றும் சிறப்பு நாட்கள் என அதிக விடுமுறை நாட்கள் வரவுள்ளது. அவ்வகையில் ஜனவரி மாதத்தில் மொத்தம் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள், நான்கு சனிக்கிழமைகள் விடுமுறையாகும். இது தவிர பொங்கல், திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் தினம் என்ற மூன்று நாட்கள் விடுமுறை வரவுள்ளது. மேலும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா விடுமுறை என்று ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்தம் 13 நாட்களும், ஜனவரி 2,3,4 ஆகிய தேதிகளை சேர்த்து ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் விடுமுறை காரணமாக 16 நாட்களும் அடுத்த மாதத்தில் விடுமுறை வரவுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |