Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! தமிழக மக்களே…. “வந்துருச்சு சூப்பர் மருத்துவ திட்டம்”…. அறிமுகம் செய்து வைத்த அமைச்சர்….!!!

தமிழகத்தில் புதிய மருத்துவ திட்டம் ஒன்றை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிமுகம் செய்துள்ளார்.

ஆசியாவிலேயே மிகவும் பழமையான மருத்துவமனைகளில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒன்று. இந்த மருத்துவமனை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்காக மருத்துவ சேவையை செய்து வருகின்றது. ஆரம்பகாலத்தில் வடசென்னை பகுதி பொது மக்களால் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைக்கப்பட்ட இந்த மருத்துவமனை நாளடைவில் உருமாற்றம் அடைந்து இன்றைக்கு 1661 படுக்கைகள், 61 மருத்துவர்கள், 332 செவிலியர்கள் என்று பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறது.

இதன் பலனாக தற்போது இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 1500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும், 5000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த அளவுக்கு இந்த மருத்துவமனை சிறப்பாக சேவை செய்து வருகின்றது. இங்கு தீவிர அறுவை சிகிச்சைக்கான 20 ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தீவிர சிகிச்சை பிரிவு உள்ளது. முக்கியமாக சக்கரை நோய், யோகா, இயற்கை மருத்துவம் என பல துறைகள் உள்ளன.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் வாழ்வூட்டும் மருத்துவம்  என்ற புதிய திட்டத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “இரவு நேரங்களில் சாப்பிட்டு முடித்து மீதமான உணவை பானையில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி மறு நாள் காலையில் மோர் அல்லது தயிர் கலந்து சாப்பிடுவது கிராமப்பகுதிகளில் வழக்கமாக உள்ளது. இந்த பழக்கத்தை சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இன்னமும் பின்பற்றி வருகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |