தமிழகத்தில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அனைத்து ரேஷன் கடை பொருட்களும் மலிவான முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை ரேஷன் கடை ஊழியர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். அதாவது அனைத்து பொதுமக்களுக்கும் ஒரே மாதிரியாக பொருள்களை விநியோகம் செய்வது என அனைத்து தொடர்பான பணிகளையும் ரேஷன் கடை ஊழியர்களின் முறையாக கவனித்து செய்து வருகிறார்கள்.இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர்களின் பணியை பாராட்டி ஒவ்வொரு வருடமும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரொக்க பரிசை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பை உணவுத்துறை வளங்கள் அமைச்சர் வெளியிட்டுள்ளார் .அதன்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு சார்பாக ரொக்க பரிசை மற்றும் சான்றிதழ் வழங்குவதன் மூலமாக ஊழியர்களின் செயல் திறனை மேம்படுத்த முடியும்.ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அவர்களின் சரித்திரனை பாராட்டி மாவட்டம் மற்றும் மாநில அளவில் பரிசு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. எனவே விரைவில் தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரொக்க பரிசை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.