சென்னையில் அரசு ஊழியர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் அரசு ஊழியர்களுக்கான மிக முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவ்வகையில் அரசு ஊழியர்களின் சில கோரிக்கை கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பு,அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை ஒன்பது மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு, தற்காலிக பணிகளில் இருக்கும் ஆசிரியர்கள் 60 வயது வரை பணியை தொடரலாம்,அக்டோபர் 15 முதல் அரசு ஊழியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வெளிப்படை தன்மையுடன் நடைபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் கண்காணிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.