நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதியான தங்கும் இடங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் திட்டம் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. அந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் விடுதிகளை திறக்க மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. நாடு முழுவதும் 497 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கூடுதலாக 50 தங்கும் விடுதிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் உயர்கல்வி படிக்கும் பெண்கள் ஆகியோரின் அடிப்படையில் வரும் காலத்தில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். தற்போது பணிபுரியும் பெண்களின் தேவைகள் மற்றும் இருப்பிட தேவைகளின் அடிப்படையில் வாடகை மாதிரி இயங்கும் வகையில் சுமார் 50 தங்கும் விடுதிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.