Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! நெல்லை மாவட்டத்திற்கு….. வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள திருத்தலங்களில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும். மேலும் இப்பண்டிகைகளில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் திருநெல்வேலியில் உள்ள காந்தி அம்மன் கோவில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது.

இது புகழ்பெற்ற தலங்களில் ஒன்றாகும். மேலும் இந்த திருத்தலத்தில் காந்தி அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் தங்கபாவாடை அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அத்துடன் இந்த திருத்தலம் அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி பீடமாக உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இறுதியில் ஐப்பசி மாத தொடக்கத்தில் காந்திமதி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த தலத்தில் உள்ள தேரானது தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குறியது.

இந்த தேர்த்திருவிழா வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகின்றது. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும், மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விடுமுறை நாளில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு எதுவும் இருந்தால் அவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும். இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |