சென்னை நந்தனத்தில் உள்ள பத்திரப்பதிவுத்துறை மற்றும் வணிகவரித் துறையை அலுவலகத்தில் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பத்திர பதிவுத்துறையில் ரூ.2100 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. இந்த வருவாயை மேலும் பெருக சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் சனிக்கிழமைகளில் நடைபெற்ற பத்திரப்பதிவு மூலம் ரூ.170 கோடி வருவாய் வந்துள்ளது. அதேநேரத்தில் வணிகவரித் துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.7,000 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பதிவுத்துறையில் இரண்டு புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் செய்பவர்களின் விலைமதிப்பு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. போலி பத்திரப் பதிவு தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து பத்திரப்பதிவு செய்ய வருபவர்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் பத்திரப்பதிவு நடைபெறுவதால் வருவாய் உயர்ந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் ஆவணம் எண்ணிக்கை உயர்த்த தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள எந்த ஒரு இடத்தையும் எங்கும் பதிவு செய்யலாம். ஒவ்வொரு பதிவு செய்யும்போது தவறுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துணைப்பதிவுத்துறை அலுவலர் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள. இதன் மூலம் பத்திரப்பதிவு மோசடிகள் தவிர்க்கப்படும். மேலும் திராவிட மாடல் ஆட்சியில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் செயல்பாடுகள் நவீனமாக்கப்பட்டுள்ளது. அதனை போல பத்திரப்பரத்துறையும் திராவிட மாடல் என்ற சொல்லுக்கு ஏற்றார் போல் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.