கர்நாடக மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முடிவடைகிறது. தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 10 முதல் மே 15 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 1 ம் வகுப்பு முதல் 7 ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளில் மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 4-ந்தேதி வரை ஆண்டு தேர்வு நடத்த வேண்டும்.
மேலும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட முடிவு வேண்டும் எனவும் எட்டாவது மற்றும் ஒன்பதாவது வகுப்புகளுக்கு மார்ச் 25 முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை தேர்வு நடத்தி ஏப்ரல்7 ல் முடிவு வெளியிட வேண்டும் என கர்நாடக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 10 முதல் மே 15 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா காரணமாக கடந்த 2019-2020,2020-2021,2021-2022 ஆகிய ஆண்டுகளில் பள்ளி வகுப்புகள் நடைபெறவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி இழப்பை சரி செய்யும் வகையில் இந்த ஆண்டு கல்வி ஆண்டு முன்கூட்டியே மே 16இல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.