Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. பள்ளிக்கல்வித்துறையின் சூப்பர் அறிவிப்பு…. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்….!!!!!!!!

விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரானா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வும் நடைபெறவில்லை. நடப்பாண்டிலும் கொரோனா  காரணமாக தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டது. மிகக் குறைந்த காலத்திலேயே பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டது. எனவே பொது தேர்தலை நடத்தாமல் மாணவர்களை ஆல் பாஸ் வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் நடப்பாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ம்  தேதி முடிவடைந்து உள்ளது. அதேபோல் 10ம்  வகுப்பு பொது தேர்வு 6 ம் தேதி முதல் தொடங்கி மே 30ஆம் தேதி முடிவடைந்துள்ளது. பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி முடிவடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கியிருக்கின்றது. 11 ம் வகுப்பு பொதுத் தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணி வருகின்ற 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அதாவது 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதில் கடுமை இருக்கக் கூடாது. மாணவர்கள் ஓரளவு விடை எழுதி இருந்தால் அதற்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக தோல்வியடையும் மாணவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தாராளமாக மதிப்பெண்களை வழங்க ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |