2021 – 22ம் ஆண்டிற்கான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிடமாறுதல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மாறுதல் ஒளிவுமறைவு எதுவும் இல்லாமல் 2021- 22 ஆம் கல்வியாண்டு முதல் நடத்துவதற்கு கொள்கை வகுக்கப்படும் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த கல்வியாண்டிற்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர், உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு 28.12. 2021 அன்றும், பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியர் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு வரும் 29 ஆம் தேதி காலை 10 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.