Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. பென்சன் வாங்குவோருக்கு…. தமிழக பட்ஜெட்டில் செம சூப்பர் அறிவிப்பு….!!!!

ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக ரூபாய் 50 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2022 23 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நேற்று நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதில் அரசு பணியாளர்கள் நலன் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது: “தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதாரர்கள், குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் மரணத்தின் போது அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் கோவிட் பெருந்தொற்றால் இந்த தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

எனவே ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை நேர் செய்ய ஒரு சிறப்பு ஒதுக்கீடு ரூ 50 கோடி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மரணமடைந்த 327 முன்கள பணியாளர்களுக்கும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 79.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. மேலும் அகவிலைப்படி தொகையை அரசு ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவும், ஓய்வூதிய தொகையை வழங்குவதற்காகவும் பட்ஜெட்டில் 19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |