வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வருவார்கள். எனவே மக்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து இன்று தலைமை செயலகத்தில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி வருகிற ஜனவரி 11ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 10 ஆயிரத்து 300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மொத்தம் 6,468 பேருந்துகளும் மொத்தம் 16,768 பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்து இயக்கப்படும். இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதற்கு வசதியாக 16,209 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
+