தமிழகத்தில் ஒவ்வொரு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இலவச வேட்டி,சேலை வழங்குவதை குறித்து கைத்தறி துறை அமைச்சர் காந்தி கூறுகையில், எப்போதுமே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை கைத்தறி நெசவாளர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை உற்பத்தியும் அவர்கள் மூலமாக தான் கிடைக்கிறது.
இலவச சீருடை வழங்கும் திட்டதிற்கான உற்பத்தி முடிவடைந்த உடன் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி தொடங்கிவிடும். இதனால் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரைக்கும் தொடர்ந்து வேலை இருக்கும். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை உற்பத்தி கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக இந்த நிதி ஆண்டில் மட்டும் 487.92 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.