Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சூப்பர் நியூஸ்”….  அரசின் சிறப்பு ஏற்பாடு….!!!!

சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து மகளிர் மேம்பாட்டு திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களை மேம்படுத்தும் வகையில் அதற்கு பொறுப்பாளராக  ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 719 சுய உதவி குழுக்களை சேர்த்து 10 ஆயிரத்து 785 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்கும் வகையில் 28.55 கோடி ரூபாய் கடன் உதவியை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியின் பொழுது நகர நிர்வாக அமைச்சர் கே என் நேரு, அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் கே என் நேரு ‘பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக சுய தொழில் புரிந்து சமூகத்தில் வாழ மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கிவைத்தார். தற்போது முதல்வராக உள்ள மு க ஸ்டாலின் பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு கடனுதவி வழங்கி ஊக்குவித்து வருகிறார். 10 ஆண்டு காலமாக சோர்ந்து கிடந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தற்போது பொலிவு பெற்று உள்ளது. அதற்கு முழு காரணம் முதல்வர். முதல்வர் பதவி ஏற்ற 7 மாத காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 7,56,142 பயனாளிகளுக்கு ரூ.2,750 கோடி வங்கிக் கடன் உதவிகளை வழங்கியுள்ளார். சமூகத்தில் மகளிர் தன்னம்பிக்கையோடு வாழ முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |