கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பரவல் காரணமாக காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதற்கான கோரிக்கையை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாவது ஓய்வு ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தைகளின் கல்வி செலவாக மாதம் 2,250 ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது.
இது கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் துவங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. எனவே இதற்கான ஆவணங்கள் மற்றும் கோரிக்கையை மத்திய அரசு ஊழியர்கள் வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இரண்டு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மாதம்தோறும் 4500 ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.