Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. ரூ.40,000 சம்பள உயர்வு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஊழியர்களின் சம்பளம் 40 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தொடர்பான தரவுகளின் படி , ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் மே மாதத்திற்கான பணவீக்கம் அதிகரித்துள்ளதால் ஊழியர்களின் அகவிலைப்படி 6% அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி மத்திய அரசு 6% அகவிலைப் படியை உயர்த்தி வழங்கினால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயரக்கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படையில் சம்பளத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும்,

அதிகபட்சம்:

ஊழியர்களின் அடிப்படை சம்பளம்- ரூ.56,900

புதிய அகவிலைப்படி (40%) = ரூ.22,760/மாதம்

அகவிலைப்படி இதுவரை (34%) = ரூ.19,346/மாதம்

எவ்வளவு அகவிலைப்படி? = 22,760-19,346 = ரூ.3,414/மாதம்

ஆண்டு ஊதிய உயர்வு 3,414 X12 = ரூ.40,968

,குறைந்தபட்சம்:

ஊழியரின் அடிப்படை சம்பளம் = ரூ.18,000

புதிய அகவிலைப்படி (40%) = ரூ.7,200/மாதம்

அகவிலைப்படி இதுவரை (34%) ரூ.6120/மாதம்

எவ்வளவு அகவிலைப்படி? = 7200-6120 = ரூ.1080/மாதம்

ஆண்டு ஊதிய உயர்வு 1080 X12 = ரூ.12,960

Categories

Tech |