Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” மாணவர்களுக்கு இலவச சைக்கிள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.11 ஆம்  வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3 மாதத்தில்  6.18 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தொழிற்பயிற்சி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |