Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” மாணவியருக்கு ரூ.1000 உதவித்தொகை…. தமிழக அரசு புதிய உத்தரவு….!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டும். முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |