Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…..! ரயில்களில் எல்இடி டிவிகள்….. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ளூர் ரயில்களில் பயணிகளின் சோர்வை போக்கும் வகையில் எல்இடி டிவிகளை பொறுத்த கிழக்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. எல்இடி டிவி பொருத்தப்பட்ட முதல் ரயில் ஹவுராவில் இன்று காலை 11.15 மணியளவில் புறப்பட்டது. இதில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமின்றி ரெயில்வே பற்றிய முக்கிய தகவல்களும் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ரயில்வேயின் 50 உள்ளூர் ரயில்களில் 2 ஆயிரத்து 400 எல்சிடி டிவிக்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் மைசூரில் ரயில்களில் ஏற்கனவே டிவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கிழக்கு ரயில்வே முதல் முறையாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

Categories

Tech |