Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….. ரயில் நிலையங்களில் இனி ஸ்கேனர் இயந்திரம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே பயணிகளுக்கு வசதியாக புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் அதிநவீன ‘ஸ்கேனர்’ இயந்திரங்கள் நிறுவியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தக் கூடிய வகையில் ரயில்வே பாதுகாப்பு படை அதிநவீன முறையில் பைகளை ஸ்கேன் செய்யும் எந்திரங்களை சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் நிறுவபட்டுள்ளது. இந்த இயந்திரம் ரூ.45 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நவீன ‘ஸ்கேனர்’கள் மூலம் பொருட்களின் இருவேறு பக்கங்களை பார்வையிடும் வகையில் செயல்படும். இதனையடுத்து இந்த ஸ்கேனர் சிறப்பு அம்சமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க கூடிய வகையில் ஒரு மணி நேரத்தில் 300 முதல் 500 பைகளை சோதனை செய்யும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இதுபோன்ற ஸ்கேனர் களை விரைவில் தாம்பரம், செங்கல்பட்டு போன்ற இதர ரயில் நிலையங்களில் அமைக்கவும் திட்டமிட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |