Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”….. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் சௌகரியம் ஆகவும் குறைந்த கட்டணத்திலும் பயணிக்க முடியும் என்பதால் அதிக அளவிலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்கள் தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை நான்கு மணி நேரத்திற்கு முன்பு மாற்றும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்பு இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ரயில் நிலையத்தை மாற்றுமுறை கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. IRCTC இணையதளத்தில் போர்டிங் பாயின்ட் சேஞ்ச் என்ற வசதியை பயன்படுத்திய கயிறு ஏறும் நிலையத்தை எளிதாக மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |