Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…! ரூ.40,000 உங்க கணக்கில் வரவு…. செம மகிழ்ச்சியில் PF சந்தாதாரர்கள்…!!!!

பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் EPF மீதான வட்டி வரவு வைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2021- 22 நிதியாண்டில் ஊழியர்களின் கணக்குகளுக்கு 8.1 சதவீதம் வட்டி சென்றடையும். இந்த வட்டியானது மார்ச் 2022ல் திருத்தப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் ஜூன் மாதத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அவர்களுடைய கணக்கில் வட்டி வந்து சேரும். ஆனால் இந்த முறை மென்பொருள் அப்டேட் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் இது தாமதமானது.

இப்போது  2021-22க்கான பிஎஃப் நிலுவைத்தொகை 8.1% வட்டியுடன் கிரெடிட் செய்யப்பட்டு கிரெடிட் வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் தற்போது வரை 6 கோடி PF பயனர்கள் உள்ள நிலையில் PF கணக்கில் ரூ. 5 லட்சம் வரை வைத்திருக்கும் பயனர்கள் இதன் மூலமாக  ரூ.40,000 கூடுதலாக பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் PF சந்தாதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |