Categories
அரசியல்

குஷியோ குஷி….. விமான நிலையத்தில் வியாபாரம்….. சுயஉதவிக் குழுவினர் மகிழ்ச்சி….!!!!

கைவினைப் பொருட்களை விமான நிலையங்களில் விற்பனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

நம் நாட்டில் சிறு குறு கைவினை கலைஞர்களுக்கான சந்தை வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றது . அதிலும் சுய உதவிக்குழுவினர் தயாரிப்புகளுக்கான சந்தை வாய்ப்புகள் குறைவுதான். அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், அதிகப்படுத்தவும் சாலையோர கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக கைவினைப் பொருட்களின் விற்பனை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் முக்கியமாக விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் திட்டம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

கைவினை பொருள்கள் அனைத்தும் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளதால் விமான நிலையங்களில் அதிக அளவில் விற்பனை ஆகின்றது. தற்போது ஒரு சில விமான நிலையங்களில் மற்றும் இந்த தயாரிப்பு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இதனை விரிவு படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அகர்தலா, குஷிநகர், உதாய்பூர், மதுரை உள்ளிட்ட 12 விமான நிலையங்களில் மட்டுமே தற்போது கைவினைப் பொருட்களின் விற்பனை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் வாரணாசி, கொல்கத்தா, கோயம்புத்தூர், ராய்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களிலும் இனி சுய உதவிக்குழுவினர் கைவினைப் பொருட்கள் சிறுகுறு தொழிலாளர்களின் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. அதேபோல் விசாகப்பட்டினம், புவனேஷ்வர், ராய்பூர், சில்சார், திப்ருகார், ஜோர்கத்  உள்ளிட்ட இடங்களிலும் விற்பனை மையங்கள் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருவதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |