Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 2000 வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பெருமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என டெல்லியில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக ஒரு குழுவினை ஏற்பாடு செய்து சேதமடைந்த பயிர்களை நேரில் சென்று அந்தக் குழுவின் மூலம் பார்வையிட்டு சேதம் குறித்த விபரங்களை சேகரித்து அந்த விபரங்களின் அடிப்படையில் தற்போது இழப்பீடு வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 2000 ரூபாய் வழங்க டெல்லி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக ரூபாய் 53 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு விவசாயிக்கு 70 சதவீதத்திற்கு கீழ் இழப்பீடு ஏற்பட்டிருந்தால் 70 சதவிகிதம் நிவாரணம் வழங்கப்படும் 70 சதவீதத்திற்கும் மேல் இழப்பீடு ஏற்பட்டிருந்தால் 100% நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |