Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

விவசாயிகளிடமிருந்து 19% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு தமிழக நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கிய நடப்பு கொள்முதல் சீசரின் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய வாணிபக் கழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் பல மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரித்தது.

இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதி கோரிய நிலையில் 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு வாணிபக் கழகத்திற்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |