Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. வேலையில்லாத இளைஞர்களுக்கு சலுகை…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை உருவாகும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்,மனவளர்ச்சி குன்றிய மற்றும் புற சிந்தனை உடைய குழந்தைகளின் பெற்றோர்கள் பயன்பெற கல்வி வயது உள்ளிட்ட விதிமுறைகளை தளர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் பயன்பெற பொது பிரிவினருக்கு 18 முதல் 35 வரையும், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் இனத்தவர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்சமாக 45 வயது வரையும் இருக்க வேண்டும் எனவும் எட்டாம் வகுப்பு கல்வித் தகுதியும் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் பல்வேறு விதிமுறைகளை அரசு விதித்திருந்தது.

ஆனால் இந்த விதிகளில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு தளர்வு வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு விதிகள் தகர்த்தப்பட்டுள்ளன.அவ்வகையில் மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற அதிகபட்ச வயதாக 45 முதல் 55 வயது வரை உயர்த்தியும் எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்ற விதியை நீக்கியும் தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |