Categories
கல்வி மாநில செய்திகள்

“குஷியோ குஷி”… 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி அவசியமில்லை…!!!!

தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயமல்ல என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்  கொரோனா தொற்று  குறைய தொடங்கியதை  தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நேரடியாக நடைபெற்று வருகின்றது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடை பெறவில்லை. ஆனால் இந்த நடப்பாண்டில் பொது தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

அதன்படி 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நிறைவடையும். பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி நிறைவடையும் மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி நிறைவடையும். இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதி வெளியாகும்.

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 7 ம் தேதியும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ஆம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புதிதாக தொழில் கல்வி என்ற பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் இந்த தொழில் கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் அல்ல.

மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாணவர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பள்ளி கல்வித்துறையின் தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |