தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓரிரு மாதங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
ஆண்டு இறுதி தேர்வுக்கு குறைவான காலம் மட்டுமே இருப்பதால் பள்ளி பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மார்ச் மாதம் இறுதிக்குள் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்று பிறகுதான் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.