Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” 15,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. மாநில கல்வி அமைச்சர் அதிரடி…!!!!

15,000 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் காலியாகவுள்ள 15,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படுவதாக, தொடக்க மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, கர்நாடகா பள்ளிகளில்  6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆகவே 15,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத உள்ளதாகவும் மற்றும்  இதற்கான அரசாணை வருகின்ற 21 தேதி வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதை அடுத்து மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பத்தினை அனுப்பலாம்.மேலும் பி.எட்., – டி.இ.டி., படித்த இன்ஜினியரிங் மாணவர்களுகளுக்கும் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படுவதாக வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வயது வரம்பும் இரண்டு ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எஸ்.சி., – -எஸ்.டி., பிரிவினருக்கு 47 வயதாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 45 வயது எனவும் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 42 வயது என்ற நிலையில்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார்.

Categories

Tech |